மனவெளிப் பகிர்வுகள்

Sunday, August 29, 2010

ஒளிப்படக் குறும்புகள்

Read more »
Posted by சிவமுருகன் at 12:30 PM 1 comment:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Saturday, August 7, 2010

ஓர் இனிய அனுபவ பகிர்வு;

Posted by சிவமுருகன் at 12:30 PM 4 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Home
Subscribe to: Posts (Atom)

என் எழுத்தை வாசிப்போர்

என் பழைய பனை ஓலைகள்

  • ►  2011 (11)
    • ►  November (1)
    • ►  September (7)
    • ►  August (1)
    • ►  April (2)
  • ▼  2010 (2)
    • ▼  August (2)
      • ஒளிப்படக் குறும்புகள்
      • ஓர் இனிய அனுபவ பகிர்வு;

நான் என்பவன்...

My photo
சிவமுருகன்
கோபிசெட்டிபாளையம், தமிழ்நாடு, India
பிறந்தது : 1977 ஊர் : கோபிச்செட்டிபாளையம் படித்தது : MCA ( காருண்யா institute of technology , Coimbatore). BSC Chemistry ( கோபி கலை அறிவியல் கல்லூரி) பிடித்தது : தமிழ்
View my complete profile

இன்று புதிதாய் பிறந்தேன்

நீண்ட நெடு நாட்களுக்குப் பிறகு இன்று அதிசயமாய் அதிகாலை 5.30 மணிக்கே விழிப்பு வந்தது. பச்சைமலை கோவிலுக்கு போகலாம், போய் ஒரு வருஷத்துக்கும் மேலாச்சு என்றது மனது. தலைக்கு குளித்து, சூடாய் கொஞ்சம் தேனீர் அருந்தி, Digital camera - வுடன் புதிதாய் ஓட்ட கற்றுக் கொண்ட Hero Honda-வில் பயணித்தேன்.

காலை நேர அமைதி…அதிக ஆள் அரவமற்ற சாலைகள்…சொந்தக் காலில் Hero Honda ஓட்டும் சந்தோஷம்.. பச்சை மலை அடிவாரம் குளிர்ச்சியாய் வரவேற்றது வாகன அனுமதிச் சீட்டு கொடுக்கும் தாத்தாவுடன்.

படிவழியே போகாமல் Hero Honda - வுடன் மலைமேல் யானைப்பாதையில் சென்றேன்.. தூரத்தில் சாம்பல் பசுமை போர்த்திய மலைகள் பனிப்புகையில் மறைந்தும் மறையாமல் கம்பீரமாய் ஓங்கி உயர்ந்து மவுனத்தால் புன்னகைத்துக் கொண்டு இருந்தன…

பரந்து விரிந்த நீல வானப்பின்னனியில்

திட்டு திட்டாய்….

மொட்டு மொட்டாய்…

அலை அலையாய்…

கடலை கையில் எந்திய மேகங்கள் தவழ்ந்து நடை பழகிக்கொண்டு இருந்தன….

தகதகத்து இளஞ்சூரியன் தன் கோடானு கோடி கிரணக்கரங்களால் பூமியை வாரி அணைத்துக் கொள்ளத் துவங்கி இருந்தது….

கண்களை கூசாத ஒளி வெள்ளம் விண்ணில் திரண்டு, பரவி, மேகங்களில் நிரம்பி வழிந்தோடி பூமியில் இறங்கி தென்னை மரங்களை ஊடுருவி, பசும் வயல் வெளிகளில் வியாபித்து கிடந்தது.

வெகுதூரத்து ஒற்றையடிப் பாதையில் தன்னந்தனியாய் நடந்து போய்க்கொண்டு இருக்கும் பெயர்தெரியா குட்டி மனிதன்…

ஆடு மாடு மேய்க்கும் பாட்டி… கரும்பு ஆலை ஒன்றின் கரும்புகை… பச்சை பசேலென்ற முள் மரங்கள்….

இயற்கை தன் மற்றொரு நாளின் இதழ்களை ஒவ்வொன்றாக தனெக்கே உரிய மாறாத ஒழுங்குடனும்…சீர்மையுடனும் சப்தமில்லாமல் அவிழ்த்துக் கொண்டிருந்ததது....

கோவிலின் பெரிய பிரகாரத்தில் சுள்ளென்று சூரியன் படும்படி சம்மணம் இட்டு அமர்ந்தேன். மெல்ல கண்கள் மூடினேன் .

இளஞ்சூடாய் சூரிய வெப்பம் கதகதப்பாய் கண் இமைகளில் பட்டுப்படர்ந்து முகமெலாம் விரிந்தது….உடல் முழுக்க ஒளியில் நனைந்து மயிர்க்கால்கலெல்லாம் வெம்மையின் தகிப்பை உள்வாங்கிக் கொண்டிருந்தன…

எங்கிருந்தொ ஒரு குளிர் தென்றல் முதுகை வருடியது. வெப்பமும் குளிரும் கலந்ததால் ஒரு முறை உடல் சிலிர்த்தது. மூடிய கண்களுக்குள் பெரும் ஒளி வெள்ளமும் குளிர் பனியும் ஒன்றில் ஒன்று கலந்து மறைந்தன…..

பக்கத்தில் யாரோ வரும் அரவம் கேட்டு மெல்ல கண்கள் திறந்தேன்…ஒரு அழகிய வெள்ளை நாய் சற்றே நொண்டியபடி அருகே வந்து அமைதியாய் சுருண்டு படுத்து அதுவும் “சூரிய சுகம்” கண்டது.

ஒரு ஐந்தறிவும் , ஆறறிவும் ஓரே சமயத்தில் இயற்கையெனும் பேரறிவின் லயத்தில் சலனமற்று லயித்துக்கிடந்தன…

திடீரேன்று மூளையில் சில கேள்விகள்.


“யாராவது என்னைப் பார்த்துக் கொண்டு இருப்பார்களோ ? எவண்டா இவன் நட்டநடு பிரகாரத்தில், வெய்யிலில் , கண்ணை மூடி உட்கார்ந்து இருக்கான் பைத்தியம் மாதிரி என்று நினைப்பார்களோ?


“எழுந்து போய்விடலாமா? “

அடச் சீ …. எவ்வளவு அபத்தமான, கோழைத்தனமான, முதிராத மனோபாவம்.

யார் யாரோ கேட்கும் கேள்விகளுக்கும், கேட்பதாய் நானே நினைத்துக் கொள்ளூம் கேள்விகளுக்கும் பதில் சொல்லிக்கொண்டும், என் வாழ்க்கையை மற்றவர் விருப்பு வெறுப்புக்காக வாழ்ந்து கொண்டும் இருப்பதும எத்தனை பெரியஅறிவீனம்.

வாழ்வின் தேர்வில் எல்லா கேள்விகளுக்கும் நாம் பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை அது அவசியமும் இல்லை. இங்கு நூற்றுக்கு நூறு வாங்கியவர் எவரும் இல்லை.


நினைத்துவிட்டு போகட்டும்.

முருகனுக்கு ஆராதனை ஆரம்பமாகிவிட்டதை மணிச்சத்தம் உண்ர்த்தியத்து.

மெல்ல எழுந்து கருவறை சென்றேன்… ஒரிரு ஆட்கள் மட்டுமே இருந்தனர்.

பூசெய்** முடித்து திருநீறு அளித்து அர்ச்சகர் நகர்ந்தார்.

சம்மணம் இட்டு அமர்ந்தேன்.முருகனுக்கு சந்தன அலங்காரம் வெகு பாந்தமாய் இருந்தது… முகத்தில் அமைதியும்..சாந்தமும்…மிக மெல்லியதொரு புன்னகையும் தவழ்ந்து கொண்டிருந்தன.

மல்லிகையும், ரோஜாவும், சம்பங்கியும் கலவையானதொரு சுகந்தத்தை காற்றில் கரைத்துக் கொண்டிருந்தன. ஆழ்ந்து….நீண்டு சுவாசிக்க ஆரம்பித்தேன்.

எண்ணெய் விளக்குகளின் பொன்னிற மஞ்சள் ஒளியும், மங்கலான இருளும் முருகனின் அழகை மெருகேற்றின.

பாதத்தின் அருகில் பற்ற வைக்கப்பட்டு இருந்த கற்றை ஊது பத்தியின் புகை… மெல்ல அசைந்து, அசைந்து, நெளிந்து, சுழித்து, மேலெழுந்து, தாழ்ந்து நழுவி மிதந்து கொண்டிருந்தது. என் இமைகள் துடிக்க மறந்து அசைவற்று நிலைத்து நின்றன. சன்னமாய் மிக சன்னமாய் சுவாசம் போய்க்கொண்டு இருந்தது.

அந்த அற்புத நிமிடங்களில், நேற்றின் பாரங்களொ, கறைகளோ, மனத்தின் பேரிரைச்சலோ இல்லை, நாளையை பற்றிய பயங்களோ, பதட்டங்களொ, பரிதவிப்புகளோ இல்லை .மனம் நிகழ்காலத்தின் கரங்களில் தன்னை பரிபூரணமாய் சமர்ப்பித்து, ஓர்மையில் ஒடுங்கி, தன்னில்தானாய் கரைந்து கொண்டிருந்தது….


எனக்கு நானே சொல்லிக்கொண்டேன் “ இன்று புதிதாய் பிறந்தேன் “



பசுமை போர்த்திய மலைகள்

பசுமை போர்த்திய மலைகள்

திட்டு திட்டாய்….

திட்டு திட்டாய்….

மொட்டு மொட்டாய்…

மொட்டு மொட்டாய்…

அலை அலையாய்…

அலை அலையாய்…

தென்னை மரங்களை ஊடுருவி

தென்னை மரங்களை ஊடுருவி

பசும் வயல் வெளி

பசும் வயல் வெளி

ஒளி வெள்ளம்

ஒளி வெள்ளம்

இளஞ்சூரியன்...

இளஞ்சூரியன்...

ஆடு மாடு மேய்க்கும் பாட்டி

ஆடு மாடு மேய்க்கும் பாட்டி

ஒற்றையடிப் பாதையில்

ஒற்றையடிப் பாதையில்

முள் மரங்கள்

முள் மரங்கள்

சுள்ளென்று சூரியன்

சுள்ளென்று சூரியன்

வெள்ளை நாய்

வெள்ளை நாய்

அமைதியும்..சாந்தமும்…

அமைதியும்..சாந்தமும்…

கோபுர தரிசனம்

கோபுர தரிசனம்

எனக்கு நானே

எனக்கு நானே

Pages

  • Home
இந்த வலைப்பூ… என் சொந்த உழைப்பு….படைப்புகளை ரசியுங்கள்…வேறுவகையில் பயன்படுத்த எனது அனுமதி பெறுங்கள். Awesome Inc. theme. Powered by Blogger.